இந்தியாவின் குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு அவர்கள் இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் புதிய கவர்னர்களை நியமித்துள்ளார். அதன் வரிசை பின்வருமாறு…
அருணாச்சல பிரதேசத்தின் கவர்னராக ஜெனரல் கைவல்ய த்ரிவிக்ரம் பர்நாய்க் நியமிக்கப்பட்டுள்ளார். சிக்கிம் மாநிலத்தின் கவர்னராக லக்சுமன் பிரசாத், ஜார்கண்ட் கவர்னராக சிபி இராதகிருஷ்ணன், இமாச்சல் பிரதேசத்தின் கவர்னராக ஷிவ் ப்ரதாப் சுக்லா, அஸ்ஸாம் கவர்னராக குலாப் சந்த் கட்டாரியா போன்றோர்களி நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னாள் நீதிபதி அப்துல் நசீர் ஆந்திர பிரதேசத்தின் கவர்னராகவும், ஆந்திராவின் கவர்னரான பிஸ்வா புஷன் ஹரிசந்தன் சட்டிஸ்கர் கவர்னராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல சட்டிஸ்கரின் கவர்னர் சுஷ்ரி அனுசுயா மணிப்பூர் கவர்னராகவும், மணிப்பூர் கவர்னரான தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசன் நாகலாந்து கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். பிஹார் கவர்னர் பகு செளகன் மேகாலயா கவர்னராகவும், இமாச்சல் பிரதேச கவர்னர் ராஜேந்திர விஷ்வநாத் பிஹார் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்கண்ட் கவர்னரான ரமேஷ் பைஸ் மகாராஷ்டிரா கவர்னராகவும், அருணாச்சல பிரதேசத்தின் கவர்னர் பிடி மிஸ்ரா லடாக்கின் கவர்னராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.