பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.1 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியை பல்வேறு அமைப்புகள் பாராட்டினர்.
திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் தேர்ச்சி சதவிகித்ததில் முதலிடத்தினை பிடித்துள்ளது . இந்நிலையில் மாணவர்கள் அதிகம் படிக்கும் கே.எஸ்.சி மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 99.1 சதவிகிதம் தேர்ச்சியடைந்துள்ளது . இதுவரை 80 சதவிகிதம் கூட தேர்ச்சியடையாத மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, இந்தாண்டு முதல் முறையாக 99.1 சதவிகித தேர்ச்சியை பெற்றுள்ளது. தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்ததற்கு காரணமாக இருந்ததாக தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பல்வேறு சமூக அமைப்பினர் பாராட்டி கவுரவித்தனர்.
Discussion about this post