பிளஸ் 2 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகள் கொரோனா ஊரடங்கால் நடைபெறாமல் இருந்தன. இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. திருத்தப் பணிகளில் மொத்தம் 44 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர். 202 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும் நிலையில், ஒவ்வொரு மையங்களிலும் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
Discussion about this post