மரண தண்டனையை ஒழிக்கும் ஐ.நா.வின் வரைவு தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.
உலகம் முழுவதும் மரண தண்டனையை ஒழிக்க ஐக்கிய நாடுகள் அவை முயற்சி செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மரண தண்டனையை ஒழிப்பதற்கான வரைவு தீர்மானம் ஐ.நா.வில் கொண்டுவரப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது, மரண தண்டனை ஒழிப்புக்கு ஆதரவாக 123 நாடுகள் வாக்களித்தன. மரண தண்டனை ஒழிப்புக்கு எதிராக இந்தியா உள்பட 30 நாடுகள் வாக்களித்துள்ளன.
தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது குறித்து விளக்கம் அளித்துள்ள ஐ.நா.வுக்கான இந்திய தூதர் பலோமி திரிபாதி, இந்தியாவில் அரிதிலும் அரிதாக மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும், நீதிமன்றம் மூலம் முறையான விசாரணை நடைபெற்ற பின்னரே இந்த தண்டனை விதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Discussion about this post