வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறையால் 122 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது தெரியவந்துள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட விவகாரம் தொடர்பாக வடகிழக்கு டெல்லியில் இருதரப்பினர் இடையே கடந்த வாரம் பயங்கர மோதல் வெடித்தது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவின் பேரில், துணை ஆட்சியர்கள் தலைமையில் 18 குழுக்கள் சேத விவரங்களை கணக்கிட்டு வருகின்றனர். அதன்படி தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில், வன்முறையால் 122 வீடுகள், 322 கடைகள், 301 இருசக்கர வாகனங்கள் முற்றிலும் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கலவரத்தால் 47 பேர் பலியானதாகவும், 350 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதால், சேத மதிப்பு உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post