இந்தியாவில் வளரவிரும்பும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தமிழகத்தில் கால்பதிக்க வேண்டிய கட்டாயநிலை உள்ளது என அதானி குழும தலைமை செயல் அதிகாரி கரண் அதானி உலக முதலீட்டாளர் மாநாட்டில் கூறியுள்ளார். தலைசிறந்த நிர்வாகிகளையும், ஆசிரியர்களையும் நாட்டுக்கு கொடுத்த மாநிலம் தமிழகம் என புகழாரம் சூட்டிய அவர், தொழில் வளர்ச்சியில் மற்ற மாநிலங்களும் தமிழகத்தை பின்தொடர்வதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அதானி குழுமத்தின் சார்பில் 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post