‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் 11ஆவது மாநாடு இன்று தொடங்குகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து நேற்று பிரேசில் புறப்பட்டு சென்றார்.
இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து நேற்று பிரேசில் புறப்பட்டு சென்றார். இன்றும், நாளையும் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளை உள்ள பிரிக்ஸ் மாநாட்டில், தீவிரவாத எதிர்ப்பு விஷயத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளன.
வளமான எதிர்காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற கருப்பொருள் அடிப்படையில் நடைபெறும் மாநாட்டில், அறிவியல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் நல்லுறவை மேம்படுத்தவது குறித்தும் தலைவர்கள் விவாதிக்கின்றனர். இந்த மாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
Discussion about this post