118 ஆண்டுகளுக்குப் பின் தலைநகர் டெல்லியில் நிலவி வரும் கடும் குளிரால் இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது….
வட மாநிலங்களான டெல்லி, உத்திர பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வருடம் வழக்கத்திற்கு மாறாக கடுமையான பனி மூட்டம் நிலவி வருகிறது. தலை நகர் டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கடந்த 1901 ம் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலை 17. 3 டிகிரி செல்சியசாக பதிவானது. இந்நிலையில், 118 ஆண்டுகளுக்குப் பின் தற்போது 13. 1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் மிக குறைந்த பட்சமாக 2.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இதனால் தலைநகர் டெல்லிக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் “ ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், காலை நேரங்களில் அதிக பனிமூட்டம் நிலவுவதால் வாகன போக்குவரத்தும், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post