இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 10 கோடி ரூபாய் மோசடி செய்த 6 பேர் கொண்ட கும்பலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த சந்தான கிருஷ்ணனின் மகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக, சரவணக்குமார் என்பவர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதற்காக 21 லட்ச ரூபாய் பணம் பெற்றுக்கொண்ட சரவணக்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து போலி நியமன ஆணைகளை தயாரித்து சந்தான கிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார். இதனை அறிந்த சந்தான கிருஷ்ணன் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகாரின் பேரில், சரவணகுமார், ஜவஹர் பிரசாத், அன்புபிரசாத், சதீஷ்குமார், சுரேந்திரன், சுதாகர் ஆகிய 6 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் போலி ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கைது செய்யப்பட்ட ஜவஹர் பிரசாத், ஐஏஎஸ் அதிகாரி என கூறிக்கொண்டு, தலைமைச் செயலாளர், அரசு முதன்மைச் செயலாளர் ஆகியோர் பெயரில், போலி அரசாணைகளை தயாரித்து, 66 பேரிடம் 10 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கி தருவதாக 10 கோடி ரூபாய் மோசடி
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: #10cr scamhindu religious and charitable endowmentskovaiscam
Related Content
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் கோவையில் தாமதிக்கப்படும் பணிகள்! - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தல்!
By
Web team
August 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நீதிமன்றத்தையே ஏமாற்றினாரா அமைச்சர் பொன்முடி!
By
Web team
August 12, 2023
பொன்முடிக்கு கிடுக்குப்பிடி! VOLUNTEER - ஆக வந்து ஆப்பு வைத்த உயர்நீதிமன்றம்!
By
Web team
August 10, 2023
செய்வினையாகும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம்! உஷாரா இருந்துக்கோங்க மக்களே!
By
Web team
August 9, 2023
மாட்டுனாரு அமைச்சரு! பொன்முடிக்கு ஆப்பு வைக்கும் அமலாக்கத்துறை!
By
Web team
July 17, 2023