தமிழகத்தில் ஆயிரத்து 84 மெட்ரிக் டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 கோடியே 88 லட்ச ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டிருப்பதாகவும் நகராட்சி நிர்வாக ஆணையரகம் தெரிவித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் சட்ட விதிகளின்படி, தடையை மீறுபவர்களிடம் இருந்து 100 ரூபாயில் இருந்து ஒரு லட்ச ரூபாய் வரையில் அபராதம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக சென்னை மாநகராட்சியில் 266 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்து, அபராதமாக 60 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டிருப்பதாக நகராட்சி நிர்வாக ஆணையரகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாநகராட்சியில் 151 மெட்ரிக் டன் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் மூலம் 40 லட்ச ரூபாய் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக திருப்பூரில் 18 மெட்ரின் டன் பறிமுதல் செய்யப்பட்டு, அதன் மூலமாக 11 லட்ச ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.