தாளவாடியில், ஆதரவற்ற முதியவர் ஒருவருக்கு, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் செய்த சேவை, சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவித்து வருகிறது.
ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட 65 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் விடியல் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவுக்கரம் நீட்டினர். அழுக்கான உடை, தாடியுடனும் சுற்றி திரிந்து வந்த முதியவரை குளிப்பாட்டி அவருக்கு புதிய ஆடைகள் அணிவித்தனர். அது மட்டுமல்லாமல், அவரது முடிகளையும் தாடி-மீசையையும் இளைஞர்கள் நீக்கி சுத்தப்படுத்தினர். பின்னர், தாளவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தேவையான உதவிகளை அவர்கள் அளித்து வருகின்றனர். இந்தச் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
Discussion about this post