திமுக சார்பில் இன்றும் நாளையும் தமிழகத்தின் 127 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த திமுக திட்டமிட்டது.
இந்நிலையில் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, 102 இடங்களில் பொதுக் கூட்டம் நடத்த திமுகவிற்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்தது.
மேலும் 20 இடங்களில் அனுமதி வழங்க முடியாது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.