இந்திய அரசியல் நிர்ணய சபை குழுவின் உறுப்பினர் காளியண்ணனுக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா நடத்த முதலமைச்சரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்…
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வசித்துவரும் முதுபெரும் தலைவர் காளியண்ணனுக்கு 100 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, அதிமுக சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். இதனையடுத்து பேசிய அவர், விரைவில் தமிழக அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்த முதல்வர் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார் எனவும், அவரின் கனவுத் திட்டமான காவிரியுடன் திருமணிமுத்தாற்றை இணைக்கும் திட்டத்தை தமிழக அரசு சேலம் மாவட்டத்தில் தற்போது நிறைவேற்றியுள்ளதாகவும், படிப்படியாக நாமக்கல் மாவட்டத்திலும் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
Discussion about this post