திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்தந. ஊரடங்கு தளர்வாக கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்பட அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்ததால், 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி வழங்க கோரி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, திரையரங்குகள், மல்டிப்ளக்ஸ் ஆகியவற்றில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவும், கொரோனா குறித்து திரையரங்குகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post