தெலுங்கானா அமைச்சரவையில் மேலும் 10 அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் 2வது முறையாக வெற்றி பெற்ற தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திர சேகர் ராவ் முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவருடன் உள்துறை அமைச்சராக முகம்மது அலி மட்டும் பொறுப்பேற்றார். இந்நிலையில் இன்று புதிதாக மேலும் 10அமைச்சர்களுக்கு மாநில ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆட்சி பொறுப்பேற்று கடந்த 2 மாதமாக முதலமைச்சர் உட்பட இரு அமைச்சர்கள் மட்டுமே பதவி வகித்த நிலையில் தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post