காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதால் ,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 , 200 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதாலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு அதிகரித்துள்ளதாலும், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7 , 890 கன அடியில் இருந்து 10 , 200 கன அடியாக உயர்ந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 119 . 130 அடியாகவும், நீர் இருப்பு 92. 089 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 16,000 கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 750 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.
Discussion about this post