கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களில் பயணிகளிடம் திருடியதாக ஒரு லட்சத்து 71 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய ரயில்வே உலகத்தில் 2-வது மிகப்பெரிய துறையாகும். தினமும் 19 ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் சராசரியாக 1 கோடியே 30 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 71 ஆயிரம் திருட்டு வழக்குகளை ரயில்வே போலீசார் பதிவு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்குகளில் கடந்த 4 ஆண்டுகளில் 73 ஆயிரத்து 837 பேரை கைது செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.