திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஜூன் மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 32 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இணை ஆணையர் குமரதுரை முன்னிலையில் கோவிந்தம்மாள் மண்டபத்தில் நடைபெற்றது.வேதபாடசாலை உழவாரப்பணிக் குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுப்பட்டனர். ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கையில் ஒரு கோடியே 32 லட்சத்து 9 ஆயிரத்தி 474 ரூபாய் ரொக்கமாக கிடைத்துள்ளது. மேலும் ஆயிரத்து 610 கிராம் தங்கமும், 11 ஆயிரத்து 480 கிராமும் கிடைத்துள்ளது.
Discussion about this post