ஆந்திராவில் கிராமச் செயலகம், நகர்ப்புற வார்டு செயலகப் பணிகளுக்குத் தேர்வான ஒரு லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
ஆந்திர மக்களுக்கு ஒரே இடத்தில் அனைத்து விதமான சேவைகளையும் வழங்க ஜெகன்மோகன் ரெட்டி அரசு முடிவு செய்தது. இதற்காகக் கிராமங்களில் கிராமச் செயலகத்தையும், நகரப்புறங்களில் வார்டு செயலகத்தையும் உருவாக்க ஆந்திர அரசு முடிவு செய்தது. இந்தச் செயலகப் பணிக்காக நடைபெற்ற தேர்வுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் எழுத்து தேர்வு மூலம் தகுதி பெற்ற ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 728 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி விஜயவாடாவில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு தகுதி பெற்றவர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஊழல் இல்லாமல் அரசு சேவைகள் பொதுமக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Discussion about this post