15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் 2020- ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளன. இதன் தலைவராக உள்ள என்.கே. சிங் தலைமையிலான குழுவினர், பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கருத்து கேட்டு வருகின்றனர். அதன்படி, தமிழகம் வந்துள்ள 15- வது நிதிக் குழுவினர், அரசியல் கட்சியினர், தொழில் முனைவோரிடம் கருத்து கேட்டனர். இந்தநிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை நிதிக்குழுவினர் இன்று சந்தித்தனர். 5 ஆண்டுகளுக்கு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நிதி அதிகார பகிர்வு குறித்தும் நிதிக் குழுவினரிடம் முதலமைச்சர் விவாதித்தார். இந்தக் கூட்டத்தில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்
Discussion about this post