ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி அளித்துள்ளார்.
நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. இந்தநிகழ்ச்சியில் பேசிய, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். காவிரி கடலோடு கலக்கும் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படுவதால், எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அவர் உறுதி அளித்தார்.
உலகிலேயே எரிசக்தியை அதிக அளவில் உபயோகப்படுத்தும் நாடுகளில் இந்தியா 3வது இடத்தில் உள்ளதாக தர்மேந்திர பிரதான் கூறினார். மக்களுக்கு மலிவான விலையில் எரிசக்தியை அளிக்கவே மத்திய அரசு, தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
Discussion about this post