ஹீரோவானார் யோகி பாபு!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு, முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்திற்கு கூர்கா என பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, விஜய்யுடன் ‘சர்கார்’ மற்றும் ‘குப்பத்து ராஜா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் யோகி பாபு நடித்து வருகிறார்.

ண்மையில் ‘கோலமாவு கோகிலா’ படத்தில், யோகி பாபுவின் கதாபாத்திரம் மற்றும் அவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்தநிலையில் ‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ ஆகிய படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், யோகி பாபு நடிக்கிறார். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘கூர்கா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘கூர்கா’ வேடத்தில், நாயுடன் யோகிபாபு நிற்கும் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

Exit mobile version