ஸ்டாலின், தினகரன், ரஜினி, கமல் என யார் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என அ.தி.மு.க வின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், மாநில சுயாட்சிக்கு களங்கம் விளைவித்த திமுகவினர் இன்று மாநில சுயாட்சி குறித்துப் பேசி வருவது வேடிக்கையாக இருப்பதாகக் கூறினார்.
அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து இருப்பதாகவும், அதிமுக பலம் பொருந்திய கட்சியாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்டாலின், தினகரன், ரஜினி, கமல் என யார் வந்தாலும் அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது என்று வைத்திலிங்கம் உறுதிப்படக் கூறினார்.
Discussion about this post