விடுதலை புலிகள் இயக்க தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பிரபாகரனாக பாபிசிம்ஹா நடிக்க உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை 3 இயக்குனர்கள் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இவர்கள் வரிசையில், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையும் படமாக உள்ளது. ஜிகர்தண்டா படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா, பிரபாகரன் வேடத்தில் நடிக்க உள்ளார்.
ஸ்டூடியோ 18 நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சீறும் புலிகள் என பெயரிடப்பட்டுள்ளது. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த ஜி.வெங்கடேஷ் குமார் படத்தை இயக்கவுள்ளார்.