மழை, வெள்ளத்தால் பேரழிவை சந்தித்துள்ள கேரள மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நிதியுதவிகள் குறைந்து வருகின்றன. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரும் நிதி அளித்து வருகின்றனர். அதன்படி, இதுவரை 539 கோடி ரூபாய் சேர்ந்து இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த 10 லட்சம் பேரில் இதுவரை 5 லட்சம் பேர் வீடு திரும்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறியுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன், மத்திய அரசு 2 ஆயிரம் கோடி ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post