கோபிசெட்டிபாளையத்தின் சுற்று வட்டார பகுதிகளில் 2 நாட்களாக கனமழை பெய்தது. இதனால், நகரின் மையப் பகுதியிலிருந்து செல்லும் கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தடப்பள்ளி கால்வாயில் பாசனத்திற்கு வினாடிக்கு 350 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள நீரும் கலந்ததால் விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்தது.
சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், வாழை பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.