அமெரிக்காவில் பல பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஃபுளோரிடா, டெக்சாஸ் மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்து இருப்பதால், போக்குவரத்து தடை பட்டுள்ளது. சிக்னல் கம்பங்கள் மற்றும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. வெப்ப மண்டல புயல் காற்றால் மழையுடன் கூடிய சூறாவளி ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
Discussion about this post