வெளிநாட்டு பெண்ணுடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நெருக்கம்

வெளிநாட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

“அர்ஜூன் ரெட்டி” திரைப்படம் மூலம் பிரபலமடைந்த நடிகர் விஜய் தேவரகொண்டா,“கீதா கோவிந்தம்” திரைப்படம் மூலம் கோலிவுட்டிலும் பலதரப்பட்ட ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார். இந்நிலையில், விஜய் தேவரகொண்டா விம்மி என்ற வெளிநாட்டவரை காதலிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து, தற்போது அது தொடர்பான சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

இருப்பினும், அந்த புகைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் இருக்கும் பெண் யார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. தெலுங்கு திரையுலகை தொடர்ந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் தயாராகி வரும் “நோட்டா” திரைப்படம் மூலம் தமிழில் விஜய் தேவரகொண்டா அறிமுகமாகவுள்ளது குறிப்பிடத்தக்கது

Exit mobile version