தெலுங்கு நடிகர் ஹரி கிருஷ்ணா சாலை விபத்தில் பலி

தெலுங்கு நடிகரும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யுமான ஹரிகிருஷ்ணா, நலகொண்டா மாவட்டம் அனேபர்த்தி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்று கவிழ்ந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் ஹரி கிருஷ்ணா படுகாயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த திடீர் மரணம் தெலுங்கு திரையுலகம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சித் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர முன்னாள் முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமாராவிற்கு 8 ஆண் குழந்தைகள் மற்றும் 4 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், 4வது மகனாக பிறந்தவர் ஹரி கிருஷ்ணா. இவரது மகன் ஜுனியர் என்.டி.ஆர். முன்னணி தெலுங்கு நடிகர் ஆவார். மேலும் ஹரி கிருஷ்ணா ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயூடுவின் மைத்துனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version