முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. ஜெயலலிதாவுக்கு தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு இருந்த அப்பல்லோ மருத்துவர்களிடமும் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு மருத்துவர்கள் சிலர் ஆஜராகாததால், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை விடுத்தது. இந்தநிலையில், அப்பல்லோ மருத்துவமனையின் நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் விசாரணை ஆணையத்தில் இன்று ஆஜராகி உள்ளார். இவர் தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என பேட்டி அளித்தவர்.
Discussion about this post