செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று பல்வேறு நாடுகளும் ஆராய்ச்சி செய்து, செயற்கை கோள்களை அனுப்பி வருகின்றன.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் செவ்வாய்க்கு மங்கள்யான் எனும் விண்கலத்தை அனுப்பி உள்ளது. இது கடந்த 2014ஆம் ஆண்டு செவ்வாய் கோளின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக இணைந்தது. இதனிடையே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகத்தை நோக்கி இன்சைட் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 107 நாட்களை கடந்துள்ள நிலையில், சுமார் 277 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை விண்கலம் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 208 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்கு இன்னும் 98 நாட்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்ப பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராயும் வகையில் இன்சைட் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
Discussion about this post