சென்னை புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட மத்திய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், நவீன தொழில் நுட்பத்துடன் பாதுகாப்பு வளைவு அமைக்க திட்டமிட்டனர்.
அதன்படி, சீன நாட்டில் சாலை விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் நைலான் சேஃப்டி ரோலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நவீன வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் ஒளிரும் தன்மையுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நைலான் ரோலர்களை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் வாகனம் ஒட்டுபவர்கள் மற்றும் பொதுமக்களிடையே இந்த தொழில் நுட்பத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால், விபத்துக்கள் குறையும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.