சேலம் மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கரைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ரசாயன கலவைகளால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளைக் கரைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களான மேட்டூர் காவிரிக்கரை, பூலாம்பட்டி காவிரிக்கரை ஆகிய இடங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதோடு, பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post