சென்னையில் இந்த ஆண்டு 2,500 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
அதன்படி, வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
பட்டினப்பாக்கம், திருவொற்றியூர், காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிலைகளில் கரைக்கும் இடங்களிலும் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.