ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.அப்போலோ மருத்துவர்கள் பாபு மனோகர், பாஸ்கர், செந்தில்குமார், புவனேஸ்வரி ஷங்கர், சாய் சதிஷ் ஆகியோர் இன்று விசாரணைக்கு ஆஜராகினர்.
செவிலியர்கள் சாமுண்டீஸ்வரி, ராஜேஷ்வரி, ஆண் செவிலியர் அனீஷ், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ்குமார், மருத்துவமனை ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜன் உள்ளிட்டோரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணையை நடத்தினார். மருத்துவர் சாமுண்டீஸ்வரி வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து விசாரணையை விரைந்து முடிக்க ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.