தமிழக டி.ஜி.பி. அலுவலகத்தில் பெண் எஸ்.பி. ஒருவர் லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி மீது அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அரசு துறையில் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் அத்துமீறல்களை விசாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விஷாகா கமிட்டிக்கு அனுப்பப்பட்டது. அதன்படி, சீமா அகர்வால் தலைமையில் விஷாகா குழு விசாரித்தது. இந்தநிலையில், பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. புகார் அளித்த எஸ்.பி., புகாருக்குள்ளான ஐ.ஜி.யை இடமாற்றம் செய்ய வேண்டும், விசாரணை குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்து முடிவெடுக்க தங்களுக்கு அதிகாரமில்லை என்பதால், இதனை சிபிசிஐடிக்கு பரிந்துரை செய்துள்ளதாக விஷாகா குழு குறிப்பிட்டுள்ளது. மேலும், புகாருக்குள்ளான ஐ.ஜி. மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும் விஷாகா குழு பரிந்துரை செய்துள்ளது.
"விசாகா கமிட்டி வேண்டாம் சிபிசிஐடி வேண்டும்"
-
By Web Team
Related Content
பப்ஜி மதன்: இரண்டு நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
By
Web Team
June 23, 2021
கிசான் திட்ட முறைகேடு : அரசு அதிகாரிகள் 100 பேர் பணியிடை நீக்கம்
By
Web Team
October 16, 2020
வட மாநில நபர்களின் பெயரில் உதவித்தொகைப் பெற்றது எப்படி? - சி.பி.சி.ஐ.டி. தீவிர விசாரணை
By
Web Team
October 2, 2020
தட்டார்மடம் செல்வன் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு
By
Web Team
September 21, 2020
கிசான் திட்ட முறைகேடு - புகார்கள் மற்றும் தகவல்கள் தெரிவிக்க எண்கள் வெளியீடு
By
Web Team
September 18, 2020