வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதியவர்கள் ஆர்வம்

 

வாக்காளர் பட்டியியலில் பெயர் சேர்க்க, 6 லட்சத்து 31 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் 9 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இது தவிர ஆன்லைன் மூலமாகவும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், செப்டம்பர் 1 முதல் 23-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொண்டவர்களின் விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 6 லட்சத்து 31 ஆயிரத்து 127 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 933 பேரும், குறைந்த பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 115 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

அக்டோபர் 31-ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 7 மற்றும் 14 தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. 

Exit mobile version