உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய காப்பீட்டு முறையால் வாகன ஓட்டிகள் மீது பெரும் சுமை சுமத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிய திட்டத்தின்படி, 1000 CC திறன் கொண்ட கார்களுக்கான 3 ஆண்டு இன்சூரன்ஸ் 5 ஆயிரத்து 286 ரூபாயாகவும், 1500 சிசி வரை திறன்கொண்ட கார்களுக்கு 9 ஆயிரத்து 534 ரூபாயாகவும், 1500 சிசிக்கும் மேல், அதிக திறன் கொண்ட கார்களுக்கு 24 ஆயிரத்து 305 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 75 சிசிக்கும் குறைவான திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு ஆயிரத்து 45 ரூபாயும், 150 சிசி வரை திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 3 ஆயிரத்து 285 ரூபாயும், 350 சிசி வரை உள்ள வாகனங்களுக்கு 5 ஆயிரத்து 453 ரூபாயாகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 350 சிசி மேல் உள்ள இரு சக்கர வாகனங்களின் 5 ஆண்டு காப்பீட்டுத் தொகை 13 ஆயிரத்து 34 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
வாகனம் வைத்திருப்பவரா நீங்கள், இதை படிங்க முதலில்…
-
By Web Team

Related Content
இருசக்கர வாகனங்களை திருடி OLX-ல் விற்ற இளைஞர் கைது
By
Web Team
June 5, 2021
உலகிலேயே அதிக வேகத்தில் செல்லும் கார் தயாரிப்பு
By
Web Team
October 22, 2019