பூரி ஜெகன்நாதர் கோயிலில் அங்குள்ள சேவகர்களால் பக்தர்கள் பல்வேறு வகைகளில் துன்புறுத்தப்படுவதாக கூறி மிருனாளினி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத வழிப்பாட்டு தலங்களில் பக்தர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள், நிர்வாக குறைபாடுகள், தூய்மை பராமரிப்பு நடவடிக்கைகள், காணிக்கைகளின் முறையான கணக்குகள், கோயில்களின் சொத்து மதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆய்வு தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தின் மீதான அடுத்தகட்ட விசாரணை வரும் 5 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
Discussion about this post