மும்பை அந்தேரி பகுதியைச் சேர்ந்த கேஷவ்லால் சங்வி (Keshavlal Sanghvi) என்னும் முதியவர் மும்பை நீதிமன்றத்தில் அவரது மகன் (Pritish Sanghvi) பிரிதீஷ் சங்விக்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது மகன், தன் சொத்துகளை வாங்கிக் கொண்டுள்ளதாகவும், முதுமை காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள மறுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரஞ்ஜித் மற்றும் அனுஜா பிரபுதேசாய் (Ranjit and Anuja Prabhudesai) ஆகியோரைக் கொண்ட அமர்வு, வயதான காலத்தில் தங்கள் மகன் உபசரிக்கவோ கவனிக்கவோ தவறினால், அவர்கள், மகனுக்கு கொடுத்த தங்கள் சொத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று அதிரடியாக உத்தரவிட்டனர்.
Discussion about this post