சோழ மன்னர்களில் ஒருவரான ராஜேந்திர சோழனை பற்றி வட இந்தியர்களும் தெரிந்துகொள்ளும்படி, அகில இந்திய வானொலியிலும், சில எப்.எம்.களிலும் ராஜேந்திர சோழனின் வரலாறு வட இந்திய மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது.
இது தொடர்பாக நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் , “முதலாம் ராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலம் பொற்காலம் ஆகும் என்றும் அவரது வரலாற்றை இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதன்பொருட்டு இன்று இரவு 9.30 மணிக்கு அகில இந்திய வானொலியிலும், சில எப்.எம்.களிலும் ராஜேந்திர சோழனின் வரலாறு வட இந்திய மொழிகளில் ஒலிபரப்பப்பட உள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், டெல்லியில் உள்ள ஒரு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டுவதுடன், டெல்லியில் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கவும், அவரது வரலாற்றை இந்தியா முழுவதும் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்யவும் மத்திய அரசிடம் வலியுறுத்த உள்ளதாகக் குறிப்பிட்டார்.
Discussion about this post