வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தமிழகம் தயார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே அனைத்துத் துறைகளிலும் மீட்புக்குழுக்கள் அமைக்க நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அபாய எச்சரிக்கை குறித்த முகாம் சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தமிழகம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவில் இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வடகிழக்கு பருவமழைக்கு முன்னரே அனைத்துத் துறைகளிலும் மீட்புக் குழுக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பருவ மழை காரணமாக ஏற்படும் வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் கடல் சீற்றமாக இருக்கும் என்றும், அந்த நேரத்தில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தினார்.

Exit mobile version