வங்கி அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி

வங்கிகளில் பெரிய கணக்குகளை வைத்துள்ளவர்கள் பணத்தை செலுத்துவதற்கு ஒரு நாள் தாமதம் ஆனாலும் அதனை வாராக்கடனாக அறிவிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி அறிவித்தது. பல்வேறு வங்கிகளில் சுமார் 70 பெரிய கணக்குகளில் 3 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வாராக்கடனாக அறிவிக்கப்பட்டது. அதனை வசூலிப்பதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி விதித்த காலஅவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வாராக்கடன் கணக்குகள் திவால் நடவடிக்கைகளுக்காக தேசிய நிறுவனங்கள், சட்ட தீர்ப்பாயத்திடம் அளிக்கப்பட உள்ளது. இதனால் வங்கி அதிகாரிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

Exit mobile version