உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8 பேர் கொண்ட லோக்பால் தேடுதல் குழுவை மத்திய அரசு அமைத்தது. பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அரசு அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்கும் லோக்பால் சட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றியது.
ஆனால் லோக்பால் அமைப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ரஃபேல் போர் விமான ஒப்பந்த ஊழலால் தான் மத்திய அரசு லோக்பாலை அமைக்க தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில் லோக்பால் குழுவை மத்திய அரசு நேற்று அமைத்தது. உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் இந்த தேடல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா மற்றும் பிரசார் பாரதியின் தலைவர்,ஏ.சூர்யபிரகாஷ் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஏ.எஸ். கிரண்குமார் ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த தேடல் குழு லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரை செய்யும். அதன் அடிப்படையில் லோக்பால் அமைக்கப்படும்.
Discussion about this post