நியுயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில், முன்னணி வீரரான ரோஜர் பெடரர், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜான் மில்மேனை எதிர்கொண்டார். 5 முறை அமெரிக்க ஒபன் டென்னிஸ் பட்டத்தை வென்றுள்ள பெடரரை, 3-6, 7-5, 7-6, 7-6 என்ற செட் கணக்கில், வீழ்த்திய மில்மேன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
நான்காவது சுற்று ஆட்டத்தில், செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோகோவிச்சும், போர்ச்சுக்கலைச் சேர்ந்த ஜோ சவுசாவும் மோதினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச், 6-3, 6-4, 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
ஜெர்மனியின் பிலிப் கோல்சேபரை நேர் செட் கணக்கில் வீழ்த்திய ஜப்பானின் நிஷிகோரியும் காலிறுதிக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்லோவாக்கியாவின் சிபுல்கோவாவை வீழ்த்தி, அமெரிக்காவின் மடிசன் கீஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
Discussion about this post