மிக அதிக கனமழையின் குறியீடான ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்துள்ளதாக கூறினார். எனவே, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விடுக்கப்பட்டிருந்த மிக அதிக கனமழையின் குறியீடான ரெட் அலர்ட் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, தேனி, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அவர் தெரிவித்தார். கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாலசந்திரன் அறிவுறுத்தினார். 8ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.