வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் தொழிலதிபர் நீரவ் மோடியின் 637 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஷி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. நீரவ் மோடிக்கு இண்டர்போல் மூலமாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான 637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
நியூயார்க்கில் உள்ள நீரவ் மோடியின் 216 கோடி மதிப்பிலான இரண்டு அசையா சொத்துக்கள், வெளிநாடுகளின் 5 வங்கிகளில் உள்ள 278 கோடி ரூபாய் முடக்கப்பட்டு இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதேபோன்று, மும்பையில் உள்ள 20 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடும் முடக்கப்பட்டுள்ளது.
Discussion about this post