அன்னிய செலாவணி சந்தையில் வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலக வர்த்தக போர் ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது.
நேற்றைய வர்த்தக நேர முடிவில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 69 காசுகளாக இருந்தது. இன்றுகாலை வர்த்தகம் தொடங்கியதும், ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு 72 ரூபாய் 91 காசுகள் என்ற நிலையை எட்டியது.
ஜனவரி முதல் தற்போது வரை சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 13 புள்ளி 81 சதவீதம் சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் பங்குச் சந்தை, பெட்ரோலிய பொருட்களின் விலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post