டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்வதேச காரணிகளால் ரூபாய் மதிப்பு சரிவடைந்து வருவதாக கூறினார். டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் கரன்சி அதிக அளவில் சரிவடைந்துள்ள நிலையில், ரூபாயின் மதிப்பு பலவீனம் அடையாமல் சிறப்பாகவே இருப்பதால், அது குறித்து பீதியடையத் தேவையில்லை என்றார். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு குறித்த அச்சத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவானதாகவோ, பலவீனமானதாகவோ இல்லை. உலகிலேயே இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாகவும் ஜேட்லி குறிப்பிட்டார்.
Discussion about this post