ருமேனியாவில் குடும்பம் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தம் உருவாக்கிட பொதுவாக்கெடுப்பு நடைபெற்றது.
பொதுவாக குடும்பம் என்றால் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ருமேனியாவில் குடும்பம் என்றால் அர்த்தமே வேறு..அங்கு இருவர் சேர்ந்து வாழ்வது தான் குடும்பம் என அந்த நாட்டின் அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த இருவர் என்பது ஆணும் ஆணுமாக இருக்கலாம் அல்லது பெண்ணும் பெண்ணுமாக இருக்கலாம் என்பதால் அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள வார்த்தையின் அர்த்தத்தை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை இருந்து வந்தது.
அந்த வரையறையில் “இரண்டு பேர்’ என்பதற்குப் பதில், “ஒரு ஆணும், பெண்ணும்’ என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று பழைமைவாதிகள் வலியுறுத்தி வந்தனர்.எனினும், அவ்வாறு மாற்றம் செய்தால் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்று மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் இந்த பிரச்சினையை தீர்க்க பொது வாக்கெடுப்பு நடத்திவிடலாம் என்று முடிவானது.
இந்த நிலையில், இதுதொடர்பான பொதுமக்கள் வாக்கெடுப்பு நடைபெற்றது. பழமைவாத கிறிஸ்துவ மதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ருமேனியாவில், அரசமைப்புச் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கே பெரும்பாலானவர்கள் ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொதுவாக்கெடுப்பால் அனைத்துத் தரப்பினருக்குமான சட்ட அந்தஸ்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post